திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
படவிளக்கம் : குமாரபாளையத்தில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் குறள்மலைச்சங்க செயற்குழு உறுப்பினர் மதிவாணன் பங்கேற்று திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம், விடியல் ஆரம்பம், குறளின்பம், திருவள்ளுவர் தமிழ் இயக்கம் சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் விடியல் பிரகாஷ், பங்கயம் தலைமை வகித்தனர். திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறள் சொல்லி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதனை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, குறள்மலைச்சங்க செயற்குழு உறுப்பினர் மதிவாணன் துவக்கி வைத்தார். குறள்மலைச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான மதிவாணன், கோபி அருகே மலையப்பம்பாளையம் மலையில் ஆயிரத்து 330 குறட்பாக்களையும் கல்வெட்டில் செதுக்கும் பணியில் இணைந்து செயலாற்றி வருவதற்கும், 2018ல் குமாரபாளையத்தில் நடந்த உலகத் தமிழ் மரபு மாநாட்டில் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவியதற்கும் மதிவாணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
15 வருடங்களாக திருக்குறள் பணி செய்து கொண்டு, ஆயிரத்து 330 குறட்பாக்களையும் இசை வடிவில் தந்தமைக்கும், பல்வேறு நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தியதில், ரிக் வேதம், திருக்குறளின் சாரம் அல்ல, என்று ஆய்வுக்கட்டுரை எழுதிய பங்கயத்தை, பேராசிரியை விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பாராட்டினர். மேலும் திருக்குறள் உலக நூலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், பங்கயம் எழுதிய திருக்குறள் கதைநூலும் பரிசாக வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புக்காக பனங்கற்கண்டு, உலர் திராட்சை வழங்கப்பட்டது.
மோகன், கணேஷ், ராணி, சித்ரா, மோகன், ரமேஷ், யுவராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu