திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
X

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

சமூக ஆர்வலர் ஸ்டோன் சாமி மரணத்திற்கு நீதி கேட்டு, திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டோன் சுவாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி,தேசத்துரோக வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு, அடிப்படை வசதியான மருத்துவ வசதிகள் கூட மறுக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்காமலும் பிணையில் விடாமலும் அவரது உயிரை மத்திய பாஜக அரசு பறித்து விட்டதாகக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர செயலாளர் ராயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திருச்செங்கோடு நகர செயலாளர் வேலாயுதம், ஆதிநாராயணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர குழு சிவானந்தம், சுப்பிரமணி, சீனிவாசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி