தூர்வாரப்பட்ட திருச்செங்கோடு அம்மன் குளம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

தூர்வாரப்பட்ட திருச்செங்கோடு அம்மன் குளம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
X

முழுமையாக தூர்வாரப்பட்ட நிலையில்,திருச்செங்கோடு அம்மன் குளத்தை படத்தில் காணலாம்..

அசுத்தம் நிறைந்து காணப்பட்ட திருச்செங்கோடு அம்மன்குளம், தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அம்மன் குளம். இக்குளத்தில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து அசுத்தமாக இருந்தது. குப்பைகள் கொட்டப்பட்டு கடும் துர்நாற்றத்துடன் சீர்கெட்டு காணப்பட்டது.

இந்த குளத்தின் நிலை குறித்தும் அதை தூர்வார வேண்டுமென்றும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குளத்தை தூர்வாரி, தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

தற்போது, அம்மன் குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கிறது. குளக்கரையில் மீண்டும் பசுமை திரும்பி, புதுப்பொலிவு பெற்றிருப்பதால், பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!