நேரம் மற்றும் ஆற்றல் சர்வதேச இளைஞர் தின விழா சிறப்பு நிகழ்வு
நிகழ்வின் தலைப்பு: "நேரம் மற்றும் ஆற்றல்"
நிகழ்ச்சி நடைபெற்ற இடம்: செந்தூராஜா அரங்கம், ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நிகழ்ச்சி நடைபெற்ற தேதி: ஆகஸ்ட் 11, 2023
நிகழ்ச்சி நடைபெற்ற நேரம்: மாலை 2.00 மணி, வெள்ளிக்கிழமை
முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புல முதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வர் முன்னிலையில்
சிறப்பு விருந்தினர்: முன்னவர். செ. வெ. ரமேஷ். உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183.
வரவேற்புரை: பெ. கோபிகா, முதுகலை இரண்டாமாண்டு விலங்கியல் துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 வரவேற்புரை வழங்குவார்.
நிகழ்வின் சிறப்புரை: முனைவர். செ. வெ. ரமேஷ், உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் அவர்கள் "நேரம் மற்றும் ஆற்றல்" பற்றி மாணவ, மாணவர்களிடையே சிறப்புரையாற்றுவார்.
பங்கு பெறுவோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.
நிகழ்வின் முக்கியத்துவம்:
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12- ம் தேதி சர்வதேச இளைஞர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. "நேரம் மற்றும் ஆற்றல்" இளைஞர்களுக்கு விலை மதிப்பற்ற வளங்கள், அவற்றை திறம்பட நிர்வகிப்பது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு முக்கியமானது. பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், கவனச் சிதறல்களைத் தவிர்ப்பதன் மூலமும் இளைஞர்கள் தங்கள் நேரத்தை மேம்படுத்த முடியும். அவர்கள் ஆர்வமுள்ள செயல்களில் ஈடுபடுவது அவர்களின் ஆற்றலை நேர்மறையாக செலுத்தி தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும். சரியான ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் சீரான அட்டவணைகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தழுவிக் கொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் மிகச்சரியாக பயன்படுத்தி தங்கள் இலக்குகளை அடைவதற்கு சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிப்பதை உறுதி செய்யலாம்.
வளர்ச்சி இலக்கு:
"நேரம் மற்றும் ஆற்றல்" மாணவர்களின் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நேர மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பை ஒருங்கிணைத்து மாணவர்களின் முழுத்திறனையும் மேம்படுத்த சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. கனவுகளை அடைவது, மாற்றத்தை உருவாக்குவது மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை இட்டுச் செல்ல வழிவகுக்கிறது.
நன்றியுரை:
" சர்வதேச இளைஞர் தினம்" நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி தா. கிருத்திகா, முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாற்று துறை மாணவி நன்றியுரை வழங்குவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu