குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா: மாணவர்களுக்கு பரிசு

முப்பெரும் விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வள்ளலார் 200வது நினைவு ஆண்டு, வ உ சிதம்பரனார் 150-வது நினைவு ஆண்டு, மகாகவி பாரதி நினைவு 100ஆண்டு ஆகிய முப்பெரும் விழா விடியல் ஆரம்பம் சார்பில் விடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
பாரதி தலைமையாசிரியர் பாரதி நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். எஸ்.எஸ்.எம் கல்லூரி தமிழ் பேராசிரியர் சங்கரராமன் பாரதி, வ.உ.சி., வள்ளலார் பற்றி பேசினார்.
38 மாணவ, மாணவியர் பாரதியார் வேடமும், மேலும் பலர் வள்ளலார் மற்றும் வ.உ. சி. வேடமும் போட்டு வந்து அவர்கள் பேசிய கருத்துக்களை மேடையில் கூறினார்கள்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஓவியப் போட்டி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாறுவேட போட்டி வெற்றியில் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வள்ளல் பெருமானின் பேரன் உமாபதி, மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமா பாரதி வழங்கினார்கள்.
எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் மதிவாணன் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புக்கள் குறித்தும் பேசினார். பள்ளி மாணவ மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் கூறியதுடன், தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
ஆசிரிய பெருமக்கள் நவநீதன், தமிழ்ச்செல்வி, ரதி, மற்றும் மெய்யப்பன், உதவிகரம் அங்கப்பன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu