குமாரபாளையத்தில் அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் வம்பு பேசி அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அன்னை சத்யா நகரில் வசிப்பவர்கள் வெங்கடேசன், 24, முருகன், 22. கூலித்தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் சத்யா நகர் பகுதியில் வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மனோஜ் (எ) மோகன்ராஜ், 24, கவுதம், 22, முருகன், 21, ஆகியோர் இருவரையும் அழைத்து வம்பு பேசியதுடன், கைகளால் தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த நண்பர்கள் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசில் முருகன் புகாரளித்தார். புகாரின்பேரில் மனோஜ், கவுதம், முருகன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story