குமாரபாளையம் விபசார வழக்கில் இரு பெண்கள் உள்பட மூவர் கைது

குமாரபாளையம் விபசார வழக்கில் இரு பெண்கள் உள்பட மூவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் விபசார வழக்கில் இரு பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் விபசார வழக்கில் இரு பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலை,சிவசக்தி நகர், ரெட்டியார் டீக்கடை அருகே விபச்சாரம் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கடந்த 30ம் தேதி பகல் 12:00 மணியளவில் நேரில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் தப்பியோட முயற்சி செய்தனர். பெண் போலீஸ் உதவியுடன் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

மேலும், இன்ஸ்பெக்டர் ரவி தப்பி ஓடிய ஆணை துரத்தி பிடித்தார். விசாரணையில், அவர்கள் ஈரோடு, மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (எ) ஈஸ்வரி, 38, ஈரோடு, சூரியம்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி, 28, குமாரபாளையம், ஏரித்தெருவை சேர்ந்த மதியழகன் (எ) சதீஸ்குமார், 49, என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!