குமாரபாளையம் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

குமாரபாளையம் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது
X

கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் கௌதமன்

குமாரபாளையம் அருகே நிதி நிறுவன அதிபர் கவுதமன் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்

குமாரபாளையம் அருகே நிதி நிறுவன அதிபர் கவுதமன் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே பாதரை கிராமத்தை சேர்ந்தவர் கவுதமன்,( 37.). ஆகஸ்ட் 22 இரவு தனது நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டார். வெப்படை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இவரை கண்டுபிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாக தேடி வந்த நிலையில் கவுதமன் பிரேதம் சேலம் மாவட்டம், சங்ககிரி சோதனை சாவடி அருகில் உள்ள ஏரிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வெப்படையை சேர்ந்த தீபன்( 25,), பிரகாஷ்( 29,), குணசேகரன்( 27 ) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளியான தீபன் என்பவருக்கும், பைனான்ஸ் தொழில் செய்து வரும் கவுதமன் என்பவருக்கும் 1,60,000.00 ரூபாய் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு,இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

கவுதமன் பைனான்சில் மேலாளர்களாக பணியாற்றி வரும் பிரகாஷ், குணசேகரன் ஆகியோர் பைனான்ஸ் பணத்தை கையாடல் செய்ததை கவுதமன் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது. இதனால் இவர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. மூவரும் கவுதமனை தீர்த்து கட்ட செய்து அதன் படி மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து சம்பவத்தன்று கவுதமனை தாக்கி கொலை செய்து பிரேதத்தை சங்ககிரி சோதனை சாவடி அருகே உள்ள ஏரிக்கரையில் வீசி சென்றுள்ளனர். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கவுதமன் பிரேதம் பாதரை மயானத்தில் எரியூட்டபட்டது. கவுதமன் நிர்வாகியாக செயல்பட்டு வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் வெப்படை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று இரவு முதல் திரண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!