ஸ்ரீதர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் திருவிளக்கு பூஜை

ஸ்ரீதர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் திருவிளக்கு பூஜை
X

குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் சார்பில்,   திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

குமாரபாளையத்தில், குளத்துக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் சார்பில், ஆண்டுதோறும் ஆண்டுவிழா, திருவீதி உலா, திருவிளக்கு பூஜை, அன்னதான விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, 20ம் ஆண்டுவிழாவையொட்டியும், மூத்த குருசாமி வேணு குருசாமியின் 50ம் ஆண்டு யாத்திரையையொட்டியும், காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீஐயப்பன் திருவீதி உலா நடைபெற்றது.

நேற்று, சேலம் சாலை, குளத்துக்காடு, பவர் ஹவுஸ் எதிரில் உள்ள கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில், காலை முதல், இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது மாலை 05:00 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனையும், திருவிளக்கு பூஜையும், மகா பஜனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வேணு குருசாமி, முருகசாமி, ஜோதிலிங்கம், வசந்த்குமார், ஜெயபால், லோகநாதன், கண்ணன்பாபு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture