குமாரபாளையம் நகராட்சியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 2,353 அதிகம்

குமாரபாளையம் நகராட்சியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 2,353 அதிகம்
X

 குமாரபாளையம் நகராட்சியில் கமிஷனர் சசிகலா வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

குமாரபாளையம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 2,353 அதிகம் உள்ளனர்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், ஜ.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஏ.ஐ.சி.சி.டி.யூ, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வார்டுகளில் போட்டியிட தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனு பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் குமாரபாளையம் நகராட்சியில் கமிஷனர் சசிகலா வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்கள் 32,௧௦௭ பேர்; பெண் வாக்காளர்கள் 34,460 பேர்; மூன்றாம் பாலினத்தவர் 14 பேர் என ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 2,353 பேர் அதிகம் உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!