குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் சமையல் பொருட்கள் திருட்டு

குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் சமையல்   பொருட்கள் திருட்டு
X

அரசு பள்ளி சமையல் அறை.

குமாரபாளையம் அருகே அரசு துவக்கப்பள்ளி அங்கன்வாடி மையத்திலிருந்து சமையல் பொருட்கள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

குமாரபாளையம் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அங்கன்வாடி மையத்திலிருந்து சமையல் பொருட்கள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வாசுகி நகர் பகுதியில் உள்ள பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 160 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்க அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடி மையம் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் பள்ளி விடுமுறை என்பதால் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு விளையாட வந்த சிறுவர்கள் அங்கன்வாடி மையத்தின் சமையல் கூடம் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர். தலைமை ஆசிரியர் நாகரத்தினம் விரைந்து வந்து பார்வையிட்ட பொழுது, அங்கன்வாடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த துவரம் பருப்பு, கடுகு, சமையல் எண்ணெய், கடலைப்பருப்பு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் உள்ளிட்ட பல்வேறு சமையல் பொருட்கள் காணாமல் போயிருந்தது.

இது குறித்து அவர் குமாரபாளையம் போலீசில் தகவல் அளித்ததின் பெயரில் போலீசார் விரைந்து வந்து பள்ளியின் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காணாமல் போன சமையல் பொருட்கள் குறித்து புகாரினை பெற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story