தீர்த்த குடம் எடுப்பதில் இரு தரப்பு கருத்து வேறுபாடு
தீர்த்த குடம் எடுப்பதில்
இரு தரப்பு கருத்து வேறுபாடு
குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை முருகன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுப்பதில் இரு தரப்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலையில் அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டு கோவில். ஆண்டு தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது வட்டமலை கோவில் சேலம் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், மலையின் அடிவாரப் பகுதி நாமக்கல் மாவட்டமாகவும், மலைப்பகுதி சேலம் மாவட்டத்திலும் அமைந்துள்ளதால் இரண்டு மாவட்ட மக்களும் பல நூற்றாண்டுகளாக சேலம் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது இஷ்ட தெய்வமாக வணங்கி வந்தனர். இந்நிலையில் தற்பொழுது கோவில் சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சேலம் மாவட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுவாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், புறக்கணிக்கப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றத்துடன் கலந்து கொண்டு வந்தனர் பல ஆண்டுகளாக தீர்த்தக் குடம் எடுத்து வந்த நாமக்கல் மாவட்டம் தட்டான் குட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்களை இந்த ஆண்டு தீர்த்தக்குடம் எடுப்பதிலும், மேளம் கொட்டுவதிலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆயிரகணக்கானவர்கள் புனித நீராடி சிறப்பு பூஜைகள் செய்து காவடி மற்றும் தீர்த்த குடம் எடுத்தனர். அப்பொழுது இரு தரப்பினர் தனித்தனியாக எடுத்த பொழுது மேளம் கொட்டுவதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனையடுத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சமாதான பேச்சுவார்த்தை நடத்தியபின், அமைதியான முறையில் தீர்த்தக்குட நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட பகுதி சேர்ந்த பக்தர்கள், தங்களை கோவிலில் சாமி கும்பிடுவது, தங்களையும் ஊர்வலங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் காவிரிக்கரை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து ரவி என்பவர் கூறியதாவது:
காலம் காலமாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாங்களும் தீர்த்தக்குடங்கள் எடுத்து வருகிறோம். இப்போது தற்போதுள்ள நிர்வாக தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் பொதுவான கோவில்தான் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
படவிளக்கம் :
குமாரபாளையம் வட்டமலை முருகன் கோவில் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu