வாகன நெரிசலால் வழியின்றி தவித்த தீர்த்தக்குட ஊர்வலத்தினர்
குமாரபாளையத்தில் வாகன நெரிசலால் வழியின்றி தவித்த தீர்த்தக்குட ஊர்வலத்தினர்.
பவானி செல்லியாண்டி அம்மன் திருவிழாவையொட்டி பவானி வழியாக மேட்டூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வாகனங்கள் குமாரபாளையம் வழியாக திருப்பி விடப்பட்டன. நேற்று இரவு 09:00 மணியளவில் காவேரி ஆற்றிலிருந்து பல தீர்த்தக்குட ஊர்வலங்கள் வந்து கொண்டிருந்தது.
காவல் நிலையம் அருகே வந்தபோது, இடைப்பாடி சாலை, சேலம் சாலையில் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நீண்ட வரிசையில் நின்றதால் தீர்த்தகுட ஊர்வலங்கள் செல்ல வழியில்லாமல் அவைகளும் அப்படியே நின்றன. இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் இல்லை. அவர்களுக்கு பகல் நேரம் மட்டும்தான் பணி நேரம் என்றும், இரவில் கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற திருவிழா சமயங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த பகலில் சிலரும், இரவில் சிலரும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். நகரமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டதால், குமாரபாளையம் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு களைப்படைந்து இருந்தனர். போக்குவரத்தை சரி செய்ய ஆள் இல்லாமல் வாகன நெரிசலில் இடையே புகுந்து தீர்த்தக் குட ஊர்வலத்தினர் செல்ல தொடங்கினர்.
போக்குவரத்து மாற்றம் செய்யும்போது, பாதுகாப்பு பணியில் அதிக போலீசாரை நியமிக்கவும், இரு மாவட்ட போலீஸ் துறை உயரதிகாரிகள் கலந்து பேசி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu