செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலி

செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலி
X

வெப்படை காவல் நிலையம்.

பள்ளிபாளையத்தில் செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மாறண்டஹள்ளியை சேர்ந்தவர் அன்பழகன், 21. இவர் நெட்டவேலம்பாளையம் பகுதியில் உள்ள உலா தனியார் ஸ்பின்னிங் மில்லில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று பகல் 11 மணியளவில் இவரும், இவரது உடன் பணியாற்றும் நண்பர்கள் 7 பேர்களும் வெப்படை அருகே உள்ள மட்டன்காடு பகுதியில் உள்ள பழைய குவாரியில் உள்ள குட்டை நீரில் மது குடித்து விட்டு குளித்ததாக கூறப்படுகிறது. அன்பழகன் பாறை மீது ஏறி நின்று தன் செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் கால் தவறி குட்டைக்குள் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். கூட சென்ற அனைவரும் போராடி அன்பழகனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு இறந்தார். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு: நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!