நடன கலைஞர் மறைவுக்கு சங்கத்தினர் இறுதி அஞ்சலி

நடன கலைஞர் மறைவுக்கு சங்கத்தினர் இறுதி அஞ்சலி
X

படவிளக்கம் :

விஜயகாந்த் போல் வேடமிட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த ராஜா என்ற கலைஞர் குமாரபாளையம் அருகே விபத்தில் இறந்ததால், அவருக்கு அஞ்சலி செலுத்த மாநிலம் முழுவதுமிருந்து வந்த நடன கலைஞர்கள் இறுதி யாத்திரையில் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நடன கலைஞர் விபத்தில் இறந்ததால் நடன கலைஞர் சங்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடன கலைஞர் மறைவுக்கு நடன கலைஞர் சங்கத்தினர் இறுதி அஞ்சலி

குமாரபாளையத்தில் நடன கலைஞர் விபத்தில் இறந்ததால் நடன கலைஞர் சங்கத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குமாரபாளையம் மராக்காள்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 50. நடன கலைஞர். இவர் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் தன் மனைவி, குழந்தையுடன் சொந்த வேலையாக சென்று விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த டூவீலர், இவர் வந்த டூவீலர் மீது மோதியதில் ராஜா பலத்த காயமடைந்தார். பவானி மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை செய்தும் பலனின்றி இறந்தார். தேவூர் காவல் நிலைய எல்லை பகுதியில் விபத்தில் இறந்ததால், தேவூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடன கலைஞர்கள் பெருமளவில் திரண்டனர். நீண்ட நேரம் ஆகியும் பிரேத பரிசோதனை செய்யாததால், கலைஞர்கள் ஆவேசமடைந்தனர். இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:

விபத்தில் இறந்த பின், எப்.ஐ.ஆர். போட்டு, 5 மணி நேரம் விசாரணை செய்ய காலம் எடுத்து கொள்வார்கள். அதன் பின்தான், எங்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய கடிதம் தருவார்கள். இந்த நடைமுறையால்தான் தாமதம் ஆனது தவிர, எங்கள் மருத்துவமனையால் எந்த தாமதமும் ஏற்படவில்லை. நாங்கள் எப்பவும் தயார் நிலையில்தான் இருந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை கேட்டதும் நடன கலைஞர்கள் உள்ளிட்ட உறவினர்கள் அமைதியாகினர்.

சேலம், ஈரோடு, கோவை, சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திருப்பூர், உளுந்தூர்பேட்டை உள்பட மாநில அளவில் ஏராளமான கலைஞர்கள் விபத்தில் இறந்த ராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தனர். தமிழ்நாடு திரைப்பட நகல் நட்சத்திர கலைஞர்கள் சங்க தலைவர் ரஜினி பாபு, செயலர் எம்.ஜி.ஆர்.குமரேசன், பொருளர் கமல் கதிர், துணை தலைவர் விஜயகாந்த் கணேஷ், செயற்குழு தலைவர் விஜயகாந்த் பழனிசாமி, இணை தலைவர் தளபதி சையத் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இவர்கள் கூறியதாவது:

ராஜா கலைஞன் என்பதை தாண்டி, நல்ல மனிதர். முதன்முதலாக விஜயகாந்த் போல் மேடையில் தோன்றி, வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும், காத்திருந்து, காத்திருந்து, என்ற பாடலுக்கு நடித்தார். அவரை போல் அந்த பாடலுக்கு உயிரூட்ட முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, ஒன்றிய நிர்வாகி மணியண்ணன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself