குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு...

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு...
X
குமாரபாளையத்தில் நடைபெறுவதாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசனை தலைவராகக் கொண்டு செயல்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் காமராஜ் கூறியதாவது:

குமாரபாளையத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற இருந்தது. மாநில துணை தலைவர்கள் தங்கவேலு, மவுரியா, மாநில இளைஞரணி செயலாளரான திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருப்பதாக இருந்தது. இதுதொடர்பாக, அனைத்து பகுதியிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதே நாளில் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் தலைமையில் அவரச நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மற்றொரு நாளில் நடைபெறும். மேலும், அனைத்து வார்டுகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. அதன்படி, குமாரபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

குமாரபாளையத்தில் நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றொரு நாளில் உரிய அறிவிப்பு செய்யப்பட்டு நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் காமராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்