/* */

அஞ்சல் பெட்டியை பராமரிக்காமல் தபால் மட்டும் எடுத்து சென்ற அஞ்சல் ஊழியர்

குமாரபாளையத்தில் அஞ்சல் பெட்டியை பராமரிக்காமல் தபால் மட்டும் எடுத்து சென்ற அஞ்சல் ஊழியர் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

HIGHLIGHTS

அஞ்சல் பெட்டியை பராமரிக்காமல் தபால் மட்டும் எடுத்து சென்ற அஞ்சல் ஊழியர்
X

கோப்பு படம் : தபால் எடுத்துச் செல்லும் அஞ்சல் ஊழியர். 

குமாரபாளையம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பல இடங்களில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை போதிய பராமரிப்பின்றி சேதமாகி வருகிறது. இன்றும் போஸ்ட் கார்டு, பதிவு தபால், ஸ்பீடு தபால் ஆகியவற்றில் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் அனுப்பும் வழக்கத்தை பலரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஈ மெயில், மெசேஜ், வாட்ஸ் அப், போன்ற எண்ணற்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வந்த நிலையிலும் அஞ்சல் துறை மூலம் தபால் அனுப்பும் முறை மாறாமல் இருந்து வருகிறது.

கொரியர் மூலமும் தபால் வினியோகம் செய்து வரும் வேளையில் ஆண் மற்றும் பெண் அஞ்சல் பணியாளர்கள் வீடு வீடாக வந்து தபால் டெலிவரி செய்து வருவதை இன்றும் காண முடிகிறது. அப்படிப்பட்ட காலத்தால் அழிக்க முடியாத அஞ்சல் துறை சார்பில் தபால்களை போடுவதற்கு வசதியாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவைகள் பராமரிக்கப்படுவதில்லை. தூசி படர்ந்தும், பறவையினங்கள் எச்சமிட்டும் காண்போரை முகம் சுளிக்கும் விதமாக இருந்து வருகிறது. இதில் தபால் போடவே தயக்கம் கட்டும் நிலையில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று பஸ் ஸ்டாண்டில் உள்ள அஞ்சல் பெட்டி தூசு படர்ந்து, பறவைகளின் எச்சம் நிறைந்திருந்த நிலையில் அதை பற்றி சற்றும் கவலைப்படாமல் பெட்டியில் உள்ள தபால்களை எடுத்து செல்வதில் மட்டும் அஞ்சல் துறை ஊழியர் குறியாக இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். இவைகளை பராமரிப்பு செய்ய அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 22 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...