காவிரி கரையோரம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்த பொதுமக்கள்

குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில் அருகே ஏராளமானோர் காவிரியில் புனித நீராடினர்.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மார்கழி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக முக்கிய கோவில்கள், ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று தை அமாவாசையாதலால் அரசு திதி கொடுக்க அனுமதி கொடுத்தது.
இதனால் குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதிகளில் ஏராளமானோர் திதி கொடுத்தனர். பல மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் காவிரியில் புனித நீராடினர். குமாரபாளையம் அருகே உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்திலும் ஏராளமானோர் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu