மருத்துவ உதவிக்கு உதவிய கலெக்டருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்

மருத்துவ உதவிக்கு உதவிய கலெக்டருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்
X

படவிளக்கம் :

மருத்துவ சிகிச்சைக்கு உதவிய மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து , சிகிச்சை பெற்ற குமாரபாளையம் மாணவர் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்

மருத்துவ சிகிச்சைக்கு உதவிய மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து , சிகிச்சை பெற்ற குமாரபாளையம் மாணவர் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மருத்துவ உதவிக்கு உதவிய கலெக்டருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்

மருத்துவ சிகிச்சைக்கு உதவிய மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து , சிகிச்சை பெற்ற குமாரபாளையம் மாணவர் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசிக்கும் தாமோதரன் யுவராணியின் மகன் சுந்தரேஷ், 12. சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு இதய மருத்துவ சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா மூலமாக, தகவல் தெரிவித்து, உதவி கேட்டனர். இவருக்கு மருத்துவ உதவி கிடைக்க மாவட்ட கலெக்டர் உமா உதவி செய்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பெற்றோர்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் உமா மாணவனுக்கு சால்வை அணிவித்து உடல் நலம்

குறித்து கேட்டறிந்தார். . இதில் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, மற்றும் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வசந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!