அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த புதிய தி.மு.க. நிர்வாகிகள்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த புதிய தி.மு.க. நிர்வாகிகள்
X

குமாரபாளையத்தில் புதிய தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

குமாரபாளையத்தில் புதிய தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

குமாரபாளையம் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து பல நாட்கள் ஆனா நிலையில் தலைமை அலுவலக அறிவிப்பு நேற்று வெளியானது.

நகர அவை தலைவராக ஜெகநாதன், நகர செயலராக செல்வம், துணை செயலர்களாக ரவி, பன்னீர்செல்வம், ரேவதி, பொருளராக செல்வகுமார், மாவட்ட பிரதிநிதிகளாக ரங்கநாதன், சத்தியசீலன், வடிவேல் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை கொண்டாடும் விதமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட துணை செயலர் சேகர் வீட்டிற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!