கல்லூரி மாணவி காணவில்லை: தாய் போலீசில் புகார்
பைல் படம்- குமாரபாளையம் காவல்நிலையம்
குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயமானதாக அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் டயானா( 22.). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரும், இவரது தாயார் வெலின்பேபி( 47,) இருவரும் ஜூன் 12ல் வீட்டில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை 5 மணியளவில் தாயார் வெலின்பேபி எழுந்து பார்த்த போது, அருகில் படுத்திருந்த டாயானாவை காணவில்லை. அக்கம் பக்கம்,உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் பலனில்லை. இது குறித்து டாயானவின் தாயார் குமாரபாளையம் போலீசில் காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டி புகார் மனு கொடுத்துள்ளார். இதன்படி போலீசார் டயானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu