குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து  நகைகள், பணம் திருட்டு
X

மாரபாளையம் அருகே பூலக்காடு, ஆண்டவர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டது.

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பூலக்காடு, ஆண்டவர் நகரில் வசிப்பவர்கள் நந்தகோபால், சூரியகலா தம்பதியர். இவர்கள் இருவரும் உறவினர் துக்க காரியத்திற்கு நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அத்தனூர் சென்றனர்.

நேற்று காலை 6 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்து பார்க்கும் போது, நந்தச்கோபால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கபட்டு கதவு திறந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து நந்தகோபாலுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க தம்பதியர் நேரில் வந்து, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இதனையடுத்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

வீட்டின் உரிமையாளர் கூறுகையில், மோதிரம், தோடு உள்ளிட்ட நான்கரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 65 ஆயிரம் திருடப்பட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!