விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு விருது வழங்கிய கராத்தே மாஸ்டர்
குமாரபாளையத்தில் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டர் விருது வழங்கினார்.
Awards For Students - நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நேதாஜி சமூக சேவை மையம் சார்பில் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கராத்தே மாஸ்டர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
புத்தர் தெரு உயர்நிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி,மாணவ, மாணவியர்களுக்கு அந்தந்த பள்ளியில் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் நலவாரியம் செல்வராஜ், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu