கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகும் பொதுமக்கள்

கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகும் பொதுமக்கள்
X

எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகி வரும் பொதுமக்கள்.

தமிழக அரசின் கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை பொதுமக்கள் விரும்பி பருகி வருகின்றனர்.

கொரோனா பரவி வருவதாகவும், பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் முருங்கைகீரை, முடக்கத்தான் கீரை, துளசி, அகத்திகீரை, உளுத்தங்கஞ்சி, அருகம்புல்சாறு உள்ளிட்ட பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.

இது போன்ற பானங்களை ஏரளமானோர் அருந்தி வருவதால், கத்தேரி பிரிவு, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், போலீஸ் ஸ்டேஷன் பகுதி, 3 காவேரி பாலங்கள் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் இது போன்ற கடைகள் அதிகரித்து வருகிறது.

Tags

Next Story
ai and business intelligence