வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்!
வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட பொழுது பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி நிவாரணம் வழங்கினார்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை நிரம்பியதை அடுத்து கர்நாடகா மாநில கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகியவற்றிலிருந்து வந்த உபரி நீர் அதிகபட்சமாக 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு, ஜனதா நகர், நாட்டான்கவுண்டர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரமாக வசித்து வந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருவாய்த் துறையினராலும், நகராட்சி அதிகாரிகளாலும் மீட்கப்பட்டு தனியார் மற்றும் நகராட்சி திருமண மண்டபங்களில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
தற்பொழுது காவிரியில் வெள்ளம் குறைந்ததை அடுத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் குடியேறி உள்ளனர். இந்த சூழ்நிலையில் வெள்ளத்தின் காரணமாக வீடுகளில் நீர் புகுந்ததால் உடைமைகளை இழந்து தவித்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் உடுத்த உடைகள் வழங்கி, மேலும் சில உதவிகள் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu