அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்வில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.

குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நன்றி தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, நேற்று குமாரபாளையம் அருகே கிராமப்புற பகுதிகளில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனை பயன்படுத்தி அ.தி.மு.வினர், வரப்போகும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரமாகவும் மாற்றியமைத்தனர். ஒவ்வொரு பகுதியிலும் எம்.எல்.ஏ வருகையில் அதிக பெண்கள் ஆரத்தி எடுத்தனர். கட்சியினரும் பெருமளவில் ஒன்று திரண்டு தங்கமணி செய்த சாதனைகளை மைக் மூலம் பிரச்சாரம் செய்த படி சென்றனர். பொதுமக்கள் வேலைக்கு செல்லும் முன்பே நன்றி அறிவிப்பு நிகழ்வை நடத்த திட்டமிட்டு காலை 07:00 மணி முதலே தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்வினை நடத்தினர்.

Tags

Next Story
ai and machine learning future