வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் தருவதாக முன்னாள் அமைச்சர் உறுதி
குமாரபாளையம் வெள்ளபெருக்கினை முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டார்.
காவிரி வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு மையங்களில் மாவட்ட கலெக்டர் ஆறுதல் சொல்ல, அதன் பின் வந்த முன்னாள் அமைச்சர் மாற்று இடம் தரவிருப்பதாக உறுதியளித்தார்.
குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 4 பாதுகாப்பு மையங்களில் காவிரி கரையோர பகுதி மக்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், வேண்டிய வசதிகள் செய்து தரும்படி வருவாய்த்துறையினருக்கு அறிவுறுத்தினார். இதன் பின் வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது மாற்று இடம் வேண்டும் என அவர்கள் கேட்க, மாவட்ட கலெக்டரிடம் கூறி ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
இது பற்றி தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தின் நீர் பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்த காரணத்தால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிகம் வந்து கொண்டுள்ளது. மேலும் நீர் வரத்து அதிகம் ஆகும் நிலையில், அதிக மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். கடந்த முறை இதே போல் வெள்ளம் வந்த போது, சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டு, இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது போல் நிலை வந்தால்தான், மாற்று இடம் பற்றி நினைக்கிறார்கள். இப்போது கூட பொதுமக்களிடம் கேட்ட போது, மாற்று இடம் கொடுத்தால் போய் விடுகிறோம் என்று கூறினார்கள். ஆகவே இது குறித்து கலெக்டரிடம் பேசி உள்ளேன். எம்.எல்.ஏ. என்ற முறையில் இன்னும் ஓரிரு மாதங்களில் மாற்று இடம் கொடுத்து தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், அ.தி.மு.க. கவுன்சிலர் பழனிச்சாமி, முன்னாள் நகர செயலாளர் குமணன், நகர துணை செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu