குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை விழாக்குழுவினர் ஆய்வு

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை விழாக்குழுவினர் ஆய்வு
X

 குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை விழாக்குழுவினர், போட்டி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். (இடம்: ஆனங்கூர் சாலை கிரீன் லேண்ட் பள்ளி அருகில், சஷ்டி நகர் )

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பேரவை விழாக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வரும் ஜனவரி மாதத்தில் 6வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டி நடைபெறும் இடத்தை விழாக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், விஜய்கண்ணன், நகர தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஓ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ், ரவி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன் சேகர், ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த ராஜ்குமார், விடியல் பிரகாஷ், சுகுமார், புவனேஷ், இனியாராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் வினோத்குமார் கூறுகையில், குமாரபாளையம் அருகே எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி மாதத்தில் 6வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டு ஆனங்கூர் சாலை கிரீன் லேண்ட் பள்ளி அருகில், சஷ்டி நகர் எனும் புதிய இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பதுடன், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டதன் பலனாக, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வெப்படை, சேலம், ஓமலூர், பவானி, அந்தியூர், ஈரோடு உள்ளிட்ட பகுதியிலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருவது மிகுந்த மன நிறைவை தருவதாக உள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். காளைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture