பள்ளிபாளையம் அருகே உயிருக்கு பாதுகாப்பு கேட்டு குடும்பமே போலீசில் தஞ்சம்

பள்ளிபாளையம் அருகே உயிருக்கு பாதுகாப்பு கேட்டு குடும்பமே போலீசில் தஞ்சம்
X

பைல் படம்.

பள்ளிபாளையம் அருகே ஓரே சமுதாயத்தினரிடையே தீண்டாமை நடவடிக்கையால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தஅவர் ராஜவேல். நூற்பாலை சார்ந்த தொழில் செய்து வரும் இவருக்கு சில மாதங்கள் முன்பு வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணிடம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சமுதாய தலைவர் சின்னப்பன் என்பவர், மற்றொரு சமுதாயத்தினருடன் பழகியதால், அதே ஊரை சேர்ந்த யாரும் ராஜவேல் குடும்பத்தாருடன் பழக்க வழக்கங்கள் வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட ராஜவேல் குடும்பத்தினர், சின்னப்பன் கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்த நிலையில், பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்து, தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என தெரவித்துள்ளார்.

போலீசார் எங்கள் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு கொடுங்கள் எனவும் கூறியுள்ளார். ஓரே சமுதாயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!