அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தை சீரமைத்த ஆற்றல் பொதுநல அமைப்பினர்
பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை அரசு பள்ளியில் ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்த 2 வகுப்பறை கட்டிடத்தை பி.டி.ஏ.தலைவர் முருகேசன் திறந்து வைத்தார்.
பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை அரசு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடத்தை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்தனர்.
பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து இருந்தது. இதனை குமாரபாளையம் ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து கொடுத்தனர். இந்த சீரமைக்கப்பட்ட சத்துணவு கூடத்தை பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் முருகேசன் திறந்து வைத்தார். இதில், ஊராட்சி தலைவர் சங்கீதா மோகன், தலைமையாசிரியர் ராஜமாணிக்கம், ஆற்றல் பொதுநல அமைப்பின் தலைவர் அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu