வாகன விபத்தில் சிக்கிய முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

வாகன விபத்தில் சிக்கிய முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
X
குமாரபாளையத்தில் டூவீலர், கார் மோதியதில் முதியவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குமாரபாளையத்தில் டூவீலர், கார் மோதியதில் ஒருவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலித்தொழிலாளி கணபதி (60). இவர் நேற்று முன்தினம் தனது ஹோண்டா டயா இருசக்கர வாகனத்திற்கு டயர் வாங்குவதற்காக சென்றபோது மதியம் 12 மணி அளவில் கத்தேரி பிரிவு அருகே குமாரபாளையம் செல்ல திரும்பியபோது, பின்னால் வந்த மாருதி சுசுகி கார் வேகமாக வந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணபதி ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுனர் பள்ளிபாளையத்தை சேர்ந்த அய்யப்பன், 48, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!