நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஓட்டுனர் படுகாயம்
நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஓட்டுனர் படுகாயம்
குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஓட்டுனர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்த்தவர் தரணிகுமார், 26. சரக்கு வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர். இவர் டிச. 10, மதியம் 12:30 மணியளவில், வட்டமலை பஸ் நிறுத்தம் முன்பு, தனது தோஸ்த் சரக்கு வாகனத்தை நிறுத்தி வைத்த போது, பின்னால் வந்து மகேந்திரா சரக்கு வாகனம் மோதியது. இதில், நின்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர் தரணிதரன் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், பின்னால் வந்து மோதிய வாகன ஓட்டுனர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார், 21, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu