குமாரபாளையத்தில் திமுகவினரின் மாபெரும் ரத்ததான முகாம்

குமாரபாளையத்தில் திமுகவினரின் மாபெரும் ரத்ததான முகாம்
X

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் குமாரபாளையம் நகர இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் சுந்தரம் காலனி நகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில், மாவட்ட இளைஞரணி துணையமைப்பாளர் எஸ்.கதிரவன்சேகர் வரவேற்றார். நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி இரத்ததான முகாமை தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.

மாநில திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர், மாணிக்கம், முன்னாள் நகர்மன்றத் தலைவர், நகர பொறுப்புக்குழு துணைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் நகரக் கழக பொறுப்பாளர் எம் செல்வம், முன்னாள் நகர செயலர் வெங்கடேசன், நிர்வாகி ஓ.ஆர்.எஸ். எனப்படும் செல்வராஜ் வாழ்த்தி பேசினார்கள்.

நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் குமராபாளையம் நகர இளைஞரணி இணைந்து நடத்திய இம்முகாமில் நகர பொறுப்புக்குழுவினர்களும் கிளைக் கழகசெயலாளர்களும் கழக மூத்த முன்னோடிகளும் இளைஞர் அணியினர்கள் மற்றும் மாணவர் அணியினர்கள் மகளிர்அணியினர் மற்றும் அனைத்து சார்பு அணியினரும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்று இரத்தம் தானம் வழங்கினார்கள். நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!