குமாரபாளையத்தில் 11 வருடங்களுக்கு பின் தலைமறைவு குற்றவாளி கைது

குமாரபாளையத்தில் 11 வருடங்களுக்கு பின் தலைமறைவு குற்றவாளி கைது
X

குற்றவாளி மணிகண்டனுடன் போலீசார்.

11 வருடங்களுக்குப்பின் தலைமறைவு குற்றவாளியை குமாரபாளையம் போலீசாரால் கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி, பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றவாளி மணிகண்டன் (வயது 34) மீது வழக்குப்பதியப்பட்டது. இதைனயடுத்து போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தான்.

இந்நிலையில் குற்றவாளி மணிகண்டன், நீலகிரி மாவட்டம், வேடன்வயல் பகுதியில் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.,க்கள் முருகேசன், ராஜா ஆகியோர் நேரில் சென்று கைது செய்தனர். நேற்று அவர் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

Tags

Next Story