காவலர் குடியிருப்பை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர்!

காவலர் குடியிருப்பை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர்!
X

படவிளக்கம்: குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு திறப்பு விழாவில் ஏ.டி.எஸ்.பி. கங்கேஸ்வரி பங்கேற்றார்.

குமாரபாளையத்தில் போலீஸ் குடியிருப்பை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

காவலர் குடியிருப்பு திறந்து வைத்த தமிழக முதல்வர்

குமாரபாளையத்தில் போலீஸ் குடியிருப்பை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் போலீசாருக்கு காவலர் குடியிருப்பு கட்ட, பல இடங்களில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இறுதியாக எஸ்.எஸ்.எம். பொறியியியல் கல்லூரி பின்புறம் அதற்கான இடம் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணி துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதனை சில நாட்கள் முன்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி. கங்கேஸ்வரி தலைமை வகித்தார்.

இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:

408.97 லட்சங்கள் மதிப்பில் குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணி நிறைவு பெற்றதையடுத்து, 32 வீடுகளில், தரை தளம், மின் இணைப்பு பணிகள், குழாய்கள் அமைத்த பணிகள், குடிநீர் டேங்க்குகள் பொருத்திய பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. விஸ்வநாதன் ஏற்கனவே ஆய்வு செய்தார். நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். குடியிருப்பு பகுதி முழுதும் சுற்றி, சுற்றிசுவர் அமைக்க கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். தற்போது தமிழக முதல்வர் காவலர் குடியிருப்பை திறந்து வைத்துள்ளார். மிக்க நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தவமணி. இவர் வந்ததிலிருந்து சந்து கடைகள் ஒழிப்பு, கஞ்சா, புகையிலை விற்பனை ஒழிப்பு உள்ளிட்டவைகளில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கைது செய்து பொதுமக்கள் பாராட்டினை பெற்றுள்ளார். அது போல் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்து அச்சத்தை போக்கி வருகிறார். மாணவ, மாணவியர்களுக்கு மனமகிழ் மன்றம் ஏற்படுத்தி தினமும், மாணவர்களிடையே போலீசார் நண்பர்கள் எனும் உணர்வை ஏற்படுத்த, விளையாட்டு பொருட்களான கேரம் போர்டு, செஸ் போர்டு, பூப்பந்து பேட், வாலிபால் ஆகியன வாங்கி வைத்துள்ளார். தினமும் மாணவ, மாணவியர் இங்கு வந்து விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள். நகர எல்லைக்குள் இருக்கும் ஆதரவற்றோர் மையங்களுக்கு சென்று, அங்குள்ள முதியவர்களுடன் உரையாடி, உணவு வழங்கி வருவதுடன், உங்கள் பிள்ளை போல் நான் இருக்கிறேன், என ஆறுதல் கூறியும் வருகிறார். அந்த மையங்களுக்கு தன்னால் ஆன சிறு, சிறு உதவிகளும் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் இவருக்கு பொதுமக்கள் சார்பில் பொதுநல ஆர்வலர்கள் பலரும் சவுண்டம்மன் கோவிலில் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil