மினி மராத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்
மாணவர்கள் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்து குமாரபாளையத்தில் நடந்த ஜூனியர் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வழங்கினார்.
மாணவர்கள் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்து குமாரபாளையத்தில் ஜூனியர் மினி மாரத்தான் நடந்தது.
குமராபாளையத்தில் இளைய தலைமுறையினர் செல்போனில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து, விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜூனியர் மினி மாரத்தான் போட்டி அகரன் விளையாட்டு அமைப்பின் சார்பில் நடந்தது. இதில் 7 வயது முதல் 15 வயது வரை 900க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறுமிகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டி ஆனங்கூர் பிரிவில் தொடங்கி கத்தேரி, காந்திசிலை என 5 கி.மீ தூரம் வரை சென்று, மீண்டும் ஆனங்கூர் பிரிவில் நிறைவு பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மினி மராத்தான் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்
ஜூனியர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜய கண்ணன் பதக்கம், சான்றிதழ்,பரிசுகள் வழங்கி பாராட்டினார். அமைப்பாளர் பிரதீப் ராஜகோபால், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ குகன் மற்றும் கவுன்சிலர் ராஜ், விளையாட்டு ஆசிரியர்கள் முருகேசன் சுகுமார் கார்த்தி, அன்புக்கரசி ராஜேந்திரன், மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu