குமாரபாளையம் அருகே சிறுமியை மணந்த சிறுவன் போக்சோவில் கைது

குமாரபாளையம்  அருகே சிறுமியை மணந்த சிறுவன்   போக்சோவில் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் சிறுமியை மணந்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் வசிப்பவர் கார்த்திக்குமார், 18, தனியார் நிறுவன ஊழியர். இவர் கொக்காராயன்பேட்டை அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இவர் சில நாட்கள் முன்பு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மாணவியின் புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இருவரும் வெப்படை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, இருவரையும் அழைத்து வந்த போலீசார் கார்த்திக்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மாணவியை பெற்றோரிடம் எச்சரித்து ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai powered agriculture