பள்ளிபாளையம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் தகனம்

பள்ளிபாளையம்  அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் தகனம்
X

மாணவன் ரிதுன்.

பள்ளிபாளையம் அருகே ஆசிரியை கண்டித்தால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடல் தகனம் செய்யப்பட்டது.

பள்ளிபாளையம் அருகே தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சக மாணவியுடன் பேசியதற்காக பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன், பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவரின் உடல் பெருந்துறை ஜி.ஹெச்.ல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில் மாணவன் சாவுக்கு ஆசிரியை, தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவனின் பெற்றோருக்கு நஷ்ட ஈடாக அவனது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், அவனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் மாணவனின் உடல் உறவினர்களால் வாங்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!