திருமுறைக் கழகத்தின் 81வது ஆண்டு நிறைவு விழா தொடங்கியது
ஆனை முகனும், ஆஞ்சநேயனும் எனும் தலைப்பில் கிருஷ்ண ஜகன்னாதன் சொற்பொழிவு நடைபெற்றது.
திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழா குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை 10 நாட்கள் தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது.
ஜன. 5ல் ஆனை முகனும், ஆஞ்சநேயனும் எனும் தலைப்பில் கிருஷ்ண ஜகன்னாதன் சொற்பொழிவு நடைபெற்றது. ஜன. 6ல் இதே சொற்பொழிவு தொடரவுள்ளது. ஜன. 7ல் திருமுறை சைவ சித்தாந்தம் எனும் தலைப்பில் பவானி, தியாகராஜன் சொற்பொழிவும்,
ஜன. 8ல் திருப்பூர் பாவனாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் சத்தியமூர்த்தி, மோகன் வயலின் மற்றும் மிருதங்கம் வாசிக்க உள்ளனர். ஜன. 9ல் ஈரோடு அன்பு நாட்டிய கலா சேத்ராவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், ஜன. 10ல் ஆன்மீகம் வழங்கும் வாழ்வியல் நெறிகள் எனும் தலைப்பில் திருச்சி சுமதிஸ்ரீ, சொற்பொழிவும் நடைபெறுகிறது.
ஜன.11ல் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான ஓதுவார்கள் சண்முகசுந்தரம், வெங்கடேசனின் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. ஜன.12ல் நல்வழி காட்டும் மார்கழி எனும் தலைப்பில் மதுரை கூடல் ராகவன் சொற்பொழிவு நடைபெறுகிறது.
ஜன. 13ல் திருமந்திர செல்வம் எனும் தலைப்பில் சென்னை சிவகுமாரின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது. ஜன. 14ல் அறிவியல் வளர்ச்சியால் ஆன்மீகம் வளர்ந்திருக்கிறதா? தளர்ந்திருக்கிறதா? எனும் தலைப்பில், கலைமாமணி ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்க பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. வளர்ந்திருக்கிறது என்ற அணியில் மாது, மனோன்மணியும், தளர்ந்திருக்கிறது என்ற அணியில் நாஞ்சில் கண்ணன், விஜயசுந்தரி பேசவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருமுறைக்கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu