புதர் மண்டி கிடக்கும் தட்டான்குட்டை மயானம்: விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் அச்சம்

புதர் மண்டி கிடக்கும் தட்டான்குட்டை மயானம்: விஷ ஜந்துக்களால் பொதுமக்கள் அச்சம்
X

குமாரபாளையம் தட்டான்குட்டை மயானத்தில் புதர் போல் வளர்ந்த செடி,கொடிகள் வளர்ந்துள்ளன.

தட்டான்குட்டை மயானத்தில் புதர் போல் வளர்ந்த செடி,கொடிகளால் விஷ ஜந்துக்கள் தஞ்சம். பொதுமக்களுக்கு அச்சம்.

குமாரபாளையம் தட்டான்குட்டை மயானத்தில் புதர் போல் வளர்ந்த செடி, கொடிகளால் விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, கொங்கு திருமண மண்டபம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி மயானத்தில், தொடர் மழை காரணமாக செடி, கொடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்களான பாம்பு, தேள் ஆகியவை தஞ்சமடைந்து, அங்கு செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இறுதி சடங்கிற்காக இந்த மயானம் செல்லும் பொதுமக்கள் விஷ ஜந்துக்கள் அச்சத்தினால் மயானம் உள்ளே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக இந்த புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products