தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் பட்டயத்தலைவர் ஜெகதீஸ் தலைமையில் நடந்தது.

நடப்பு ஆண்டிற்கான புதிய தலைவராக கதிர்வேல், செயல்திட்ட செயலராக சிவராமன், நிர்வாக செயலராக கோகுல், பொருளாராக செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஆளுநர் வருகை விழா, கண், பொது மருத்துவம், ரத்த வகை கண்டறிதல், ரத்த தானம், இதய நோய், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை முகாம், உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடத்தவும், அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு, மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல், கண் சிகிச்சை முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்தல், ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்தல், ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்குதல், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், செயலர் சந்திரா, பொருளர் தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

Read MoreRead Less
Next Story