குமாரபாளையத்தில் தாெடர் மின்தடை: பொதுமக்கள் அவதி; ஜவுளி உற்பத்தி பாதிப்பு

குமாரபாளையத்தில் தாெடர் மின்தடை: பொதுமக்கள் அவதி; ஜவுளி உற்பத்தி பாதிப்பு
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

குமாரபாளையம் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றனர். நேற்று மாலை 03:00 மணிக்கு நிறுத்தப்பட்டு 06:30 மணிக்கு மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டது. நேற்று வெயிலின் தாக்கமும் அதிகம் இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். நகரின் பிரதான தொழிலான ஜவுளி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வருமானமிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தினர், மின்வாரிய உயர் அதிகாரிகள், பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை செய்து கொள்ளும் படி அறிவுறுத்த வேண்டும், மேலும் மின் விநியோக நாட்களில் பராமரிப்பு பணிகளை காலை 06:00 மணிக்கு தொடங்கி செய்து கொள்ள உத்திரவிட வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் நினைத்த நேரத்தில் மின் தடை ஏற்படுத்துவதால் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself