குமாரபாளையத்தில் கோவில் திருவிழா தகராறு: முத்தரப்பு பேச்சுவார்த்தை
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோவில் விழா தகராறு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தாசில்தார் தமிழரசி தலைமையில் நடந்தது.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் கோவில் விழா தகராறு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
குமாரபாளையம் அருகே கலியனூர் ஊராட்சி, மாரியம்மன், கரியகாளியம்மன் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவிலில் பூவோடு வைக்கும் ஒரு நபருக்கு மட்டும் கோவில் விழாவில் ஆடுவதற்கு உரிமை இதுவரை கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எங்களுடன் ஆடக்கூடாது என மற்றொரு தரப்பினர் கூறி வருவதால், நேற்று முன்தினம் திருவிழா ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரும், பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி தாசில்தார் தமிழரசி கூறி வந்தார். அதன்படி நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் குறிப்பிட்ட இடத்தில் ஆடிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், ஆர்.ஐ. கார்த்திகா பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu