பள்ளிப்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவில் திருவிழா ரத்து

பள்ளிப்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவில் திருவிழா ரத்து
X

பாப்பம்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பேனர்.

கொரோனா தாக்கம் காரணமாக, பள்ளிப்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவிலில், ஆடி மாதத்தில் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் கொரோனா தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கண்ட சிறப்பு பூஜைகள் எளிய முறையில் நடைபெறும் எனவும், பொதுமக்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவதை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு, அது முறையான தகவலாக கோவில் வளாகப் பகுதியில் பிளக்ஸ் பேனர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறும் எல்லை முனியப்பன் கோவில் திருவிழா இந்த வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி