ஆசிரியர் தினவிழா, வ.ஊ.சி. பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆசிரியர் தினவிழா, வ.ஊ.சி. பிறந்த நாள் கொண்டாட்டம்
X

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் ஆசிரியர் தினவிழா, வ.ஊ.சி. பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர் தினவிழா, வ.ஊ.சி. பிறந்த நாள் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் ஆசிரியர் தினவிழா, வ.ஊ.சி. பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் குள்ளநாய்க்கன்பாளையம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா மரம் நடும் விழா, பள்ளி சீர் வழங்கும் விழா, மெய்நிகர் வகுப்பறை திறப்பு விழா, பள்ளி அளவிலான கலைத்திருவிழா, மற்றும் எழுத்தறிவு வார விழா எனும் ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் குணசேகரன், முன்னாள் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மெய்நிகர் வகுப்பறையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினர். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திரன், வாசுதேவன், சுந்தரராசு மரக்கன்றுகளை நட்டனர்.

குணசேகரன் கணினி டேபிள், தனசேகரன் மின்விசிறியும் பள்ளிக்கு சீராக வழங்கினார்கள். மாணவ மாணவிகள் பங்குபெற்ற கலைத்திருவிழா குழுப்பாடல் நடனம் நடந்தது.

எழுத்தறிவு திட்டத்தின் வார விழாவையொட்டி சென்ற ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, எழுத்தறிவு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் ஆசிரியர் தினவிழா, வ.ஊ.சி. பிறந்தநாள்விழா தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது. வ.ஊ.சி. யின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. ஆசிரியர் குமார், விடியல் பிரகாஷ், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. நிர்வாகி லெவி பங்கேற்று ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!