/* */

டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும்

குமாரபாளையம் அருகே டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலையை கான்கிரீட் தளமாக மாற்றக் கோரிக்கை

HIGHLIGHTS

டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை  கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும்
X

குமாரபாளையம்அருகே டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும்.

குமாரபாளையம் அருகே டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலையை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்திலிருந்து பவானி செல்லும் பஸ்கள், லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்து, புறவழிச்சாலை இணைப்பு சாலை வழியாக செல்கின்றன. இந்த வளைவில் மண் சாலையாக உள்ளது. தற்போது மழை காலமாக உள்ளதால், மழை வரும் போது சேறும் சகதியுமாக மாறி டூவீலர்கள் இந்த வளைவில் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

பல வாகனங்கள் சேற்றில் சிக்கி சறுக்கி கீழே விழும் நிலையும் உருவாகி, பலர் காயமடையும் நிலை உருவாகி வருகிறது. வேகமாக சென்றுதான் இந்த இடத்தில் வாகனங்கள் திரும்ப முடியும். முன்னால் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டால் பின்னால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் நிலை வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த வளைவில் கான்கிரீட் தளம் அல்லது தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 23 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறீங்களா..? இதை படீங்க..!
  3. நாமக்கல்
    சாலை விபத்தில் காயமடைந்தவர் குணமடைந்து ஆட்சியருக்கு நன்றி
  4. இந்தியா
    வாக்குப்பதிவின் போது வெடித்த வன்முறை! குளத்தில் வீசப்பட்ட...
  5. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம், மீனாட்சி கோயிலில் உண்டியல் திறப்பு
  6. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு |...
  7. கோவை மாநகர்
    சிகிச்சை பெறும் தாய் யானையை பிரிந்து சென்ற குட்டி யானை
  8. சினிமா
    அவங்களா இவங்க..? இளைஞர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!
  9. லைஃப்ஸ்டைல்
    முதலிரவில் பாலும் பழமும் ஏன் கொடுக்கிறோம்..? அறிவியலும் கலாசாரமும்..!
  10. நாமக்கல்
    வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் ஆட்சியர்