டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும்

டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும்
X

குமாரபாளையம் அருகே டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலை கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் அருகே டீச்சர்ஸ் காலனி இணைப்பு சாலையை, கான்கிரீட் தளமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையத்திலிருந்து பவானி செல்லும் பஸ்கள், லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்து, புறவழிச்சாலை இணைப்பு சாலை வழியாக செல்கின்றன.

இந்த சாலை மண் சாலையாக உள்ளது. தற்போது மழை காலமாக உள்ளதால், மழை வரும் போது சேரும் சகதியுமாக மாறி டூவீலர்கள் இந்த வளைவில் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

பல வாகனங்கள் சேற்றில் சிக்கி சறுக்கி கீழே விழும் நிலையும் உருவாகி, பலர் காயமடையும் நிலை உருவாகி வருகிறது. வேகமாக சென்றுதான் இந்த இடத்தில் வாகனங்கள் திரும்ப முடியும். முன்னால் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டால் பின்னால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த வளைவில் கான்கிரீட் தளம் அல்லது தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story