குமாரபாளையத்தில் 100 சதவீதத்தை நெருங்கும் வரி வசூல்; நகராட்சி கமிஷனர் தகவல்

குமாரபாளையத்தில் 100 சதவீதத்தை நெருங்கும் வரி வசூல்; நகராட்சி கமிஷனர் தகவல்
X

விஜயகுமார், நகராட்சி கமிஷனர், குமாரபாளையம்.

குமாரபாளையம் நகராட்சியில் 100 சதவீத வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சியில் 100 சதவீத வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், குமாரபாளையம் நகராட்சியில் வாடகை மற்றும் வரி வசூல் ஆகாத நகராட்சி கடைகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் வாடகை மற்றும் வரி வசூல் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். 100 சதவீதம் நெருங்கும் வகையில், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீவிர முயற்சியின் பேரில் வரி வசூல் நடைபெற்று வருகிறது.

தினசரி மார்க்கெட் இடமாற்றம் செய்வது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மற்றும் அலுவலர்களிடம் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா