குமாரபாளையத்தில் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும்: ம.நீ.ம வேட்பாளர் வாக்குறுதி
குமாரபாளையம் 17வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடும் நகர மகளிரணி செயலர் சித்ரா, தனது பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
குமாரபாளையம் 17வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிடுபவர் நகர மகளிரணி செயலர் சித்ரா. இவர் தனது பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதியில், அதிக எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகள் ஊருக்குள் குறைக்கபட்டு, அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதியில் அமைக்கப்படும்.
நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து சாயக்கழிவுநீர், வடிகால் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்காமல் தவிர்க்கப்படும்.
பெரிய குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு குப்பை மேலாண்மை திட்டங்களை ஊக்குவித்து குப்பைகளில் இருந்து மின்சாரம் மற்றும் பணம் ஈட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
குப்பை வரி நீக்கபட்டு குப்பை இல்லாத தூய நகரமாக மாற்றப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக பெரிய பொது விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, நமது நகரத்தில் இருந்து விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
குமாரபாளையம் நகரத்தின் அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உறதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu