பள்ளிபாளையத்தில் தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் அமைப்பினர்.
தமிழ் புலிகள் அமைப்பினர் சார்பில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் திருநாவுக்கரசு, பள்ளிபாளையம் ரவி, தம்பம்பட்டி சுப்பிரமணியம் உள்ளிட்ட தலித் தலைவர்கள் தொடர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாடத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து தலித் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்து வருவதால், காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு வ.கார்த்தி மேற்கு மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சி.பேரறிவாளன் உரை நிகழ்த்தினார். ப.செந்தமிழன், அ.முத்துப்பாண்டி உள்பட, 100.க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu